மோடியின் ஆப், இந்தியர்களுக்கு வைக்கும் ஆப்பு: ராகுல்காந்தி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ‘நமோ ஆப்’ என்னும் ஆன்ராய்ட் செயலி மூலம் பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாகவும், இந்த ஆப், இந்தியர்களின் ரகசியங்களுக்கு வைக்கும் ஆப்பு என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக கூறியதாவது: ‘ஹாய்.., என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அதிகாரப்பூர்வ ’ஆப்’பில் உங்களை பதிவு செய்து கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்களின் கம்பெனிகளுக்கு தந்து விடுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ’மோடி ஆப்பின் மூலம் இந்தியர்களின் ரகசியங்கள் மூன்றாவது நபர்களுக்கு போய் சேருவது தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்துவரும் இந்திய ஊடகங்களின் பாராமுக நடவடிக்கைகளைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செய்தியை எப்போதும் போல் ஊடகங்கள் புதைத்ததன் மூலம் மிகப்பெரிய காரியத்தை செய்து வரும் பிரதான ஊடகங்களுக்கு நன்றி’ என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்