ராகுல்காந்தியை தூக்கிலிட வேண்டும். பாஜக எம்.எல்.ஏவின் ஆவேச பேச்சால் பரபரப்பு

ராகுல்காந்தியை தூக்கிலிட வேண்டும். பாஜக எம்.எல்.ஏவின் ஆவேச பேச்சால் பரபரப்பு

rahul gandhiடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் தேச துரோக வழக்கில் மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி செயல்பட்டு வருவதை பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் தலைவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தேச துரோக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ராகுல் காந்தியை துப்பாக்கியால் சுட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ கைலாஷ் செளத்ரி இந்த பிரச்சனை குறித்து நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தேசத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் எங்கெல்லாம் குரல் ஒலிக்கப்படுகிறதோ அங்கு ராகுல் காந்தி தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். மாணவர்களை ஆதரிப்பது தேசத் துரோகமானது. எனவே ராகுல்காந்தியும் தேசத்துரோகி ஆவார். தேசத்துரோகியான அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தூக்கிலிட வேண்டும் அல்லது துப்பாக்கியால் சுட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

கைலாஷ் செளத்ரி எம்.எல்.ஏவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Chennai Today News: Rahul Gandhi should be hanged said Rajastan MLA

Leave a Reply