பொருளாதார ஆய்வறிக்கை அறிவிப்பின்போது மக்களவையில் தூங்கிய ராகுல்காந்தி. கடும் கண்டனம்

9நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “கடந்த காங்கிரஸ் ஆட்சியின் கவனக்குறைவால் நாட்டின் நிதி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், நிதி நிலைமையை மேம்படுத்தவும் ஒருசில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நிதி நிலைமையை மேம்படுத்த அதிக வரி விதிப்பு இன்றியமையாதது என்றும் கூறினார்.

 

பொருளாதார ஆய்வு அறிக்கை குறித்து விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, மக்களவையில் உட்கார்ந்திருந்த ராகுல்காந்தி தூங்கிக்கொண்டிருந்ததாகவும், மக்களின் பிரச்சனைகள் குறித்து அலசும்போது ராகுல்காந்தி ஆளும் கட்சியாக இருக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தாரோ அதையே எதிர்க்கட்சியில் இருக்கும்போது செய்துகொண்டிருந்தார் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

ஹுசைனின் டுவிட்டர் கருத்து குறித்து ராகுல்காந்தி எவ்வித பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களவையில் ராகுல்காந்தி தூங்கிக்கொண்டிருந்தது உறுதியாகியுள்ளதால் டுவிட்டரில் பொதுமக்கள் ராகுல்காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1rVelx8″ standard=”http://www.youtube.com/v/aJ5Viq14rvk?fs=1″ vars=”ytid=aJ5Viq14rvk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9444″ /]

Leave a Reply