தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். ஆர்.எஸ்.ராஜன்

தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். ஆர்.எஸ்.ராஜன்

rahul gandhiதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி விலகி மாதக்கணக்கில் ஆகிவிட்டபோதிலும் இன்னும் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. ஒரு மாநிலத்தின் தலைவரை தேர்வு செய்ய ஒருவர்கூட தகுதியாக இல்லையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. குஷ்புவை தலைவராக தேர்வு செய்ய மேலிடம் விரும்பினாலும் மூத்த தலைவர்கள் குஷ்புவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் மேலிடம் புதிய தலைவரை தேர்வு செய்வதை கிடப்பில் போட்டுவிட்டது

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் விவசாயப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை இதுவரை தேர்வு செய்யாமல் இருப்பதற்கு கோஷ்டிப் பூசல் தான் காரணம். மாநிலத் தலைவர் பதவியை உத்தேசமா 50 பேர் வரை கேட்டுட்டு இருப்பாங்க. அதுல யாருக்கு கொடுக்கணும், என்றே அகில இந்திய தலைமைக்கு பெரிய குழப்பமா இருக்கும். அதுவும் இல்லாமல் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி புகாரை சொல்லிட்டு இருக்காங்க. 50 வருஷமா காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலை. இப்போ, புதுசா தலைவரை போட்ட உடனேயும் ஆட்சியை பிடிக்கப் போறதும் இல்லை. ராகுல் தன் பொறுப்பில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியை வச்சிருக்கணும். அப்படி என்றால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தல்ல காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். திராவிட கட்சிகளுக்கு மாற்றே காங்கிரஸ்தான். ராகுல் காந்தி தமிழகத்தில் பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் திட்டமும் எனக்கு இருக்கு.

Leave a Reply