எங்கள் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஒத்துழைக்க வேண்டும். நளினி

எங்கள் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஒத்துழைக்க வேண்டும். நளினி
nalini
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நேற்று பரோலில் வந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தன்டனை அனுபவித்து வரும் நளினி முதல்வர் ஜெயலலிதா எங்களை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த நளினியின் தந்தை சங்கரநாராயணன்  நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை கொண்டுவரப்பட்டது.

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினியின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு பரோல் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரையிலான 12 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நளினி சென்னை வந்து தனது தந்தையின் நடந்த இறுதிச் சடங்கில் நளினி கலந்துகொண்டார்.

பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறியதாவது: ”முதல்வர் ஜெயலலிதா எங்களை விடுதலை செய்வார் என்று மனதார நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம்.எந்த தவறும் செய்யாத நான் 25 ஆண்டுகளாக தண்டனை பெற்று சிறையில் இருக்கிறேன். என்னை விடுதலை செய்ய வேண்டும். எங்கள் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஒத்துழைக்க வேண்டும்” என்று நளினி கூறினார்.

பரோலில் வந்த நளினியை சீமான் உள்பட பல அரசியல்கட்சி தலைவர்கள் நேரில் பார்த்து அவருடைய தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Chennai Today News: Rahul Gandhi will help our release said Nalini

Leave a Reply