ராகுல்காந்தியை கோமாளி என்று விமர்சனம் செய்த கேரள மாநில முன்னாள் அமைச்சர் முஸ்தபா நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் தன்னுடைய கருத்துக்காக தாம் வருந்தப்போவதில்லை என்றும், என்னை சஸ்பெண்ட் செய்தாலும் ராகுல்காந்தியை கோமாளி என்று நான் சொன்னதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இன்று காலை முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி, பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொடங்கிவிட்டது. அக்கட்சியின் தலைவர்கள் வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை மும்முரமாக செய்துவந்தனர்.
ஆனால், காங்கிரசில் எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறவில்லை. மூத்த உறுப்பினர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்கவில்லை.
என்னை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்குமானால் அதனை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திய கோமாளி என்ற கூறிய கருத்தை மட்டும் நான் வாபஸ் பெறபோவதில்லை என்று கூறியுள்ளார்.