இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்: மாணவியிடம் ராகுல்காந்தி கூறியது ஏன்?
காங்கிரஸ் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம் தான். இந்த மாநிலத்திலும் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சியில் உள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மைசூர் கல்லூரி ஒன்றில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ஒரு மாணவி ‘என்.சி.சி. படையில் உள்ளவர்கள ‘சி’ சான்றிதழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன சலுகை வழங்குவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது பதிலளித்த ராகுல் காந்தி, என்.சி.சி. பயிற்சி குறித்த விவரங்கள் எனக்கு தெரியாது. எனவே, இந்த கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என தெரிவித்தார். விரைவில் இதுகுறித்து அறிந்து பின்னர் எனது கருத்தை தெரிவிக்கின்றேன்’ என்று கூறினார்.
என்.சி.சி. பயிற்சியில் ஏ பி சி பிரிவுகள் உள்ளது. இதில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கு ராணுவம் மற்றும் அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது