விடுமுறை முடிந்ததும் விவசாய போராட்டத்தில் குதித்த ராகுல்காந்தி. காங்கிரஸ் உற்சாகம்

rahul gandhiகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 56 நாட்கள் ஓய்வு எடுத்து நாடு திரும்பிய பின்னர் அதிரடியாக விவசாயிகளை மையப்படுத்தி தொடங்கியுள்ள போராட்டத்திற்கு பெரும் ஆதரவு குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

 தொழிலதிபர்களிடம் வாங்கிய ஆயிரக்கணக்கான கோடிகளைத் திருப்பிக் கொடுக்கவே, விவசாயிகளை மோடி அரசு பலிகடா ஆக்குகிறது என்று பிரதமர் மோடியை நேரடியாக ராகுல்காந்தி தாக்குதல் தொடுத்துள்ளதால் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நேற்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் மிகவும் உணர்ச்சிவசமாக பேசிய ராகுல்காந்தி, ‘விவசாயிகள் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அதைத் தடுக்க முதல் ஆளாக நான் நிற்பேன். மக்களவைத் தேர்தலின்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மோடி அரசு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டு வருகிறது. தேர்தலின்போது மோடி, தொழிலதிபர்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். அதை அவர் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும். எனவே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply