மோடி ஆட்சியில் எல்லாமே கசிவு தான்: ராகுல்காந்தி கிண்டல்

மோடி ஆட்சியில் எல்லாமே கசிவு தான்: ராகுல்காந்தி கிண்டல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு, ஆதார் தகவல்கள் கசிவு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள் கசிவு, கர்நாடக தேர்தல் தேதி கசிவு, சி.பி.,எஸ்.இ. வினாத்தாள்கள் கசிவு, என ஒரே கசிவுமயமாக இருப்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் மோடி ஆட்சியில் எல்லாமே கசிவு தான் என்று கிண்டல் செய்துள்ளார்.

ராகுல்காந்தி இதுகுறித்து கூறியதாவது: எத்தனையோ கசிவுகள் நடந்து விட்டன. சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு, ஆதார் தகவல்கள் கசிவு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள் கசிவு, கர்நாடக தேர்தல் தேதி கசிவு, சி.பி.,எஸ்.இ. வினாத்தாள்கள் கசிவு, எல்லாவற்றிலும் இப்படி ‘கசிவு’ நடப்பது வழக்கமாகி விட்டது. பொறுப்பாளி (பிரதமர்) பலவீனமானவர் என்பதால்தான் இத்தனை கசிவுகள்” என குறிப்பிட்டு உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த டுவீட்டுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்\

Leave a Reply