ராகுல்காந்தி தமிழகம் வருகை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்
சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பொதுமக்களையும் பார்வையிடுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வரும் அவர் புதுச்சேரியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஷண்முகா நகர் மற்றும் ஈச்சம்பாளையம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார்.
பின்னர், கடலூர் சென்று காரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுகிறார். இதையடுத்து, சென்னை வரும் ராகுல் காந்தி, தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.