தலைமைச்செயலளார் வீட்டில் சோதனை. பெரும்புள்ளிகள் கலங்குவது ஏன்?
தமிழக தலைமைச்செயலளார் ராம்மோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வரிமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசியலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சோதனை நடவடிக்கையால் பெரும்புள்ளிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு பின்னர் பல பெரும்புள்ளிகளின் தலை உருளும் என்று கூறப்படுகிறது.
தலைமைச்செயலளார் வீட்டில் சோதனை என்றால் கண்டிப்பாக அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இந்த சோதனை நடக்காது என்றே கருதப்படுகிறது. உரிய ஆதாரம் கிடைத்த பின்னர்தான், இந்த சோதனையை வருமான வரித்துறை நடத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த சோதனையின்போது அவர் தவறு செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவ்வாறு வழக்கு பதியப்படும்போது, ராம மோகன ராவ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வேறு தலைமைச் செயலாளர் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன,.