MGM நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!!

தீம் பார்க் நிறுவனங்களில் ஒன்றான MGM யில் இன்று காலை இந்நிறுவனத்திற்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

MGM க்கு சொந்தமான நட்சத்திர விடுதி,கேளிக்கை பூங்கா,அலுவலகம் மற்றும் ஊழியர்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.