மோடியின் காரை தாமதப்படுத்திய ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட்.
சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஷ்கர் மாநிலத்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்தபோது அவருடைய பாதுகாப்பை கருதி, டெல்லியில் இருந்து சத்திஷ்கருக்கு குண்டு துளைக்காத கார் கொண்டு வரப்பட்டது. சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துவிட்டு டெல்லி சென்றவுடன் அந்த குண்டு துளைக்காத கார் மீண்டும் டெல்லிக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது.
ஆனால் பிரதமரின் மறுநாளைய தேவைக்கு உரிய நேரத்தில் அந்த கார் பிரதமர் அலுவலகம் வரவில்லை என்றும் இதுகுறித்து சரியான தகவல்களை ரயில் நிலையத்தைச் சேந்த பார்சல் அதிகாரி பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே பார்சல் அதிகாரி பி.கே.சந்தா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படார். சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர் பி.கே.சந்தா, சரியான தகவல்களை அளிக்க தவறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.