ரயிலில் ஏறும்போது தவறி விழுந்தால் பயணிகளுக்கு நஷ்ட ஈடு: அதிரடி உத்தரவு

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்தால் பயணிகளுக்கு நஷ்ட ஈடு: அதிரடி உத்தரவு

ரயிலில் ஏறும்போது பயணிகள் கூட்டத்தில் தவறி விழுந்தால் ரயில்வே நிர்வாகம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்த வழக்கு ஒன்று பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நடந்த போது ரயிலில் கூட்டமாக இருப்பதால் முண்டியடித்துக்கொண்டு ஏறும் பயணிகள் அவ்வப்போது காயம் அடைந்து வருகின்றனர்

அந்த வகையில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் தான் பயணிகள் காயம் அடைந்ததாகவும் ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகள் காயம் அடைந்தால் அவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது