மும்பையில் வரலாறு காணாத கனமழை-பெருவெள்ளம். இயல்பு நிலை பாதிப்பு

மும்பையில் வரலாறு காணாத கனமழை-பெருவெள்ளம். இயல்பு நிலை பாதிப்பு

mumbaiகடந்த ஆண்டு சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து சென்னை நகரமே மூழ்கிய நிலையில் இந்த ஆண்டு மும்பையில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. இதனால் மும்பை மாநகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கின்றது.

மும்பையில் கடந்த சில தினங்களாக கனம்ழை பெய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு இன்று நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழையாக வெளுத்து வாங்கியதால் மும்பை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

பெரும்பாலான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் பேருந்துகள் மற்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தண்டவாளம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியதால் சி.எஸ்.டி – தானே இடையே ஸ்லோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மேலும் வெள்ளம் காரணமாக மின்சாரமும் தடைபட்டுள்ளதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்று கொண்டிருக்கின்றன. மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தடைந்தன. மேலும் துறைமுக வழித்தடத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் ரயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும் பயணிகள் நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்ய அனுமதிப்பட்டனர். இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேலும் கனமழையால் விமான நிலையத்தின் ஓடுதளத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நகரில் பலத்த மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற, மாநகராட்சி ஆணையர் சுதீர் நாயக் தலைமையிலான குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply