திடீரென ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு: ஒரு வாரம் விடுமுறைக்கு வாய்ப்பு என தகவல்

திடீரென ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு: ஒரு வாரம் விடுமுறைக்கு வாய்ப்பு என தகவல்

குமரி அருகே வங்காள விரிகுடா பகுதியில் திடீரென காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை, பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வரும் நிலையில் மீண்டும் குமரி கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளது

இதனால் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவ்வார இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

அதேபோல் இம்மாத இறுதியில் அதாவது டிசம்பர் 25ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வருவதற்குள் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை இருக்கும் நிலையில் அதன் பின்னர் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டால் ஒரு வார விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்த பின்னரே விடுமுறை உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply