2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

Tamil_News_large_140443920151207072350

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாட்டங்களில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னை முதல் வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அடுத்த 48 நேரத்துக்கு, கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னை முதல் வேதாரண்யம் வரை 6 முதல் 12 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply