சென்னையில் அரை மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலையில் வெள்ளநீர் மிதந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, தி நகர், கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னையில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.