வர்தா புயலால் பெய்த மழை எவ்வளவு?

வர்தா புயலால் பெய்த மழை எவ்வளவு?

நாடா புயல் தமிழகத்தை ஏமாற்றியதுபோல வர்தா புயலும் ஏமாற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் வர்தா புயல் சென்னை உள்பட வட தமிழகத்தை கடுமையாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் சென்னை குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு மழை குறைவுதான். நேற்று வரை அதாவது டிசம்பர் 13வரை சென்னையில் 339.1 மிமீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 334.6 மிமீ மழையும், திருவள்ளூரில் 246.7 மிமீ மழையும் பெய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக இந்த ஆண்டு 157.1 மிமீ மிழையும் புதுச்சேரியில் 171.3 மிமீ மழையும் பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply