நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மீண்டும் அடுத்த வாரம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் சென்னை உள்பட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.