அஜித்துக்கு எந்த கலர் சட்டை போட்டாலும் சூப்பராக இருக்கும். ராஜகுமாரன்

அஜித்துக்கு எந்த கலர் சட்டை போட்டாலும் சூப்பராக இருக்கும். ராஜகுமாரன்

இயக்குனரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் ‘நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், தமிழ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது ‘கடுகு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனது முதல் படமான ‘நீ வருவாய் என’ படத்தில் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்தது குறித்து அவர் கூறியபோது, ‘பொதுவாக ராமராஜன் சட்டை என அழைக்கப்படும் ’பளீர்’ நிற சட்டைகளை அணிய தமிழ் சினிமா ஹீரோக்கள் விரும்புவதில்லை. ஆனால் என்னுடைய படத்தின் ஹீரோக்கள் அனைவரையும் இந்த நிறத்திலான சட்டைகளைத்தான் அணிய வைப்பேன்.

ஆனால் மற்ற ஹீரோக்களை விட, அஜித் சாருக்கு தான் பளீர் நிற சட்டைகள் மிக அழகாக ,பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பழைய அஜித்தை பார்க்க முடியுமா? என்னுடைய படத்தில் வேட்டி கட்டி பளீர் நிறத்தில் சட்டை அணிந்து கிராமத்து பாணியிலான அஜித்தை இப்போது பார்க்க முடியுமா? நீ வருவாய் என படத்திற்கு பிறகு, மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன்’. இவ்வாறு ராஜகுமாரன் கூறினார்

Leave a Reply