ஐ.நா மீது சரமாரி குற்றச்சாட்டு. இலங்கை அதிபர் ராஜபக்சே ஆவேச பேச்சு.

Mahinda Rajapaksaநேற்று ஐநா சபையில் ஆவேசமாக உரையாற்றிய இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே மனித உரிமை கவுன்சில் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விடுதலைப்புலிகளுடனான போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு, மறுகுடியர்வு ஆகிய இலங்கை அரசின் பணிகளை, மனித உரிமை கவுன்சில் முறையாக கருத்தில் கொள்ளாமல் கருத்து தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மனித உரிமை கவுன்சிலின் நடவடிக்கையால் இலங்கை துரதிஷ்டவசமாக பாதிப்படைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டில் நிலவும் சிக்கலான நிலைமைகளை கருத்தில் கொள்ளாமல் உள்நோக்கத்திற்காக மனித உரிமை கவுன்சிலை ஒரு கருவியாக ஒருசிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஐ.நாவின் நம்பகத்தன்மையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நன்பகத்தன்மையை மீண்டும் அதிகரிக்க புதிதாக ஆய்வு செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐநா அமைப்பு அரசியலாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஐ.நாவை மறுசீரமைப்பது அவசியம் என்று ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். ராணுவ யுக்திகளை கையாளாமல், உணர்வுப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், அரசுகளுடன் இணைந்து பணியாற்ற ஐநா முன்வர வேண்டும் என்றும் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து ராஜபக்சே இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply