இலங்கை பாராளுமன்ற தேர்தல். ராஜபக்சேவை எதிர்த்து பிரபாகரன் உறவினர் போட்டி

rajapakseஇலங்கையில் வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கை சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். அவர் தனது பிறந்த ஊரான ஹம்பின் டோடா மாவட்டம் குருநேகலா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து ‘டெலேர்’ (தமிழ் ஈழ விடுதலை அமைப்பு) தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இவர் ராஜபக்சேவை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  இது குறித்து அவர் கூறும் போது, ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடுவதே எனது நோக்கமாகும். எனவே குருநேகலா தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ என்றார்.

இதற்காக அவர் கடந்த 13ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம்ஆண்டு வரை இலங்கை எம்.பி.ஆக இருந்தவர்.

Leave a Reply