வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை விருதுநகரில் தோற்கடிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்வதாக இன்று வைகோ திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் மதிமுகவிற்கு 7 தொகுதிகள் தற்போது கிடைத்துள்ளது. நாங்கள் 10 தொகுதிகள் வரை கேட்டோம். ஆனால் ராம்ஜெத்மலானி மூலம் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் 7 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.
மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.
இம்முறை நான் விருதுநகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஆனால் என்னை அந்த தொகுதியில் தோற்கடிக்க சிங்கள அதிபர் ராஜபக்சே பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாக அறிகிறேன். அதேபோல மு.க.ஸ்டாலினும் என்னை தோற்கடிக்க அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இருப்பினும் தமிழ் மக்களின் ஆதரவு மதிமுகவுக்கு அமோகமாக இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்பது உறுதி.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார்.