மகனுக்காக வழக்கறிஞராக மாறிய முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே

மகனுக்காக வழக்கறிஞராக மாறிய முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே

rajapakseமுன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனைவருக்கும் ஒரு அதிபராகத்தான் தெரியும். ஆனால் அவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது பலருக்கு தெரியாது. கடந்த 1970ஆம் ஆண்டே அவர் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியலுக்கு வந்ததும் அவர் வழக்கு எதுவும் வாதாடவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது சொந்த மகனுக்காக மீண்டும் கருப்பு கவுனை ராஜபக்சே மாட்டியுள்ளார். சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜபக்சே மகன் யோஷித்த ராஜபட்சவை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மகிந்த ராஜபட்ச மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நேற்|று விசாரணை நடைபெற்றது. இந்த வாய்தாவில் ராஜபக்சே மகனுக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இந்த ஜாமீன் மனு மீது வரும் 29ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின்போது ராஜபக்சே கருப்பு கவுன் அணிந்து வழக்கறிஞராக ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply