கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றா இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வியுற்று அதிபர் பதவியை இழந்த மஹிந்தா ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவின் மனைவி புஷ்பா ராஜபக்சே ஆகியோர் நடத்தி வந்த அரசு சார்பற்ற நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் திடீரென முடக்கப்பட்டதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சே நடத்தி வந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் 103.8 மில்லியன் ரூபாயும் புஷ்பா ராஜபக்ச நடத்திய நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் 43 லட்சம் ரூபாயும் உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட இரு நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் காணப்படும் சந்தேகம் காரணமாக தற்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஷிரந்தி மற்றும் புஷ்பா ராஜபக்சே ஆகியோரிடம் நிதி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விரைவில் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.