மகனை அடுத்து மனைவியும் கைதா? ராஜபக்சே அதிர்ச்சி

மகனை அடுத்து மனைவியும் கைதா? ராஜபக்சே அதிர்ச்சி

rajapakse wife
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவியிடமும் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அவரும் கைது செய்யப்பட்டுவார் என்றும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றார். ஆட்சி  மாறிய பின்னர் முந்தைய ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு ஊழல்ல் குறித்து விசாரணை செய்யப்பட்டது.  குறிப்பாக, ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி நிர்வாகத்தில் நிதி முறைகேடு செய்த வழக்கில் ராஜபக்சேவின் மகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, நேற்று ஷிராந்தி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டதாகவும் அதற்கூ ஷிராந்தி பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இன்னும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுவார் என கூறப்படுகிறது.

Leave a Reply