என்னையே பிரதமர் ஆக்குங்கள். சிறிசேனாவிடம் கெஞ்சி கடிதம் எழுதிய ராஜபக்சே

என்னையே பிரதமர் ஆக்குங்கள். சிறிசேனாவிடம் கெஞ்சி கடிதம் எழுதிய ராஜபக்சே

rajapakseஇலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவும், அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மஹிந்தா ராஜபக்சே தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அதிபர் சிறிசேனா சமீபத்தில் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனால் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிபர் பதவியை இழந்த தனக்கு பிரதமர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அவருக்கு இந்த கடிதம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

தனது பிரதமர் கனவு தகர்த்து விட்டதே என மனம் பதறிய அவர் உடனடியாக அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார். அதில், “தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் என்னையே தாங்கள் பிரதமராக்க வேண்டும். மக்கள் தீர்ப்பில் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் அதிபர் சிறிசேனா உறுதியாக இருப்பதாகவும், மஹிந்தாவை பிரதமர் ஆக்குவதில் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே தேர்தலில் வெற்றி பெற்றாலும் மஹிந்தா ஒரு சாதாரண எம்.பிஆக மட்டுமே இருக்க முடியும் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply