இலங்கையில் ராஜபக்சே செல்வாக்கு சரிகிறதா? தேர்தல் முடிகள் கூறும் உண்மைகள்.

rajapakseஇலங்கையில் நேற்று முன் தினம் நடந்த தென் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் இலங்கை அதிபர் ராஜபக்சே கட்சி கடந்த தேர்தலைவிட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது.

இலங்கையில் தென் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நேற்று முன் தினம் விறுவிறுப்பாக நடந்தது. 34 இடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி நேருக்கு நேர் மோதின. மேலும் இந்த தேர்தலில்  ஜே.வி.பி. என்ற கட்சியும் மூன்றாவது அணியாக போட்டியிட்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி 19 இடங்களிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 13 இடங்களிலும், ஜே.வி.பி. கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று இந்த பகுதியில் பெரும் செல்வாக்கை பெற்றது. ஆனால் தற்போது ராஜபக்சேவின் கட்சி 6 இடங்களை இழந்து 19 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் ராஜபக்சே கட்சிக்கு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட, இருமடங்கு வெற்றி இந்த தேர்தலில் கிடைத்துள்ளது.

தென் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ராஜபக்சேவின் சகோதரர் மகன் பதவி வகித்து வருகிறார். எனவே அவருக்காக அதிபர் ராஜபக்சேவே நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அவரது கட்சிக்கு 22.98 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மேலும், பதுலா மாவட்டத்திலும் 67 சதவீத வாக்கில் இருந்து 47 சதவீதமாக குறைந்து விட்டது.

இந்த தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி குறைந்த இடத்தில் வெற்றி பெற்றிருப்பது அவரது செல்வாக்கின் சரிவை காட்டுவதாக உள்ளது.

Leave a Reply