ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்

Rajarajesvari

1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.

3. ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

4. விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

7. சித்து வேலைகள் கை கூடும்.

8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.

9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்

48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும் அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அவை : புலால், மது, தாம்பத்யம் போன்றவை நீக்கி விரதம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் விரதம் ஆரம்பிக்கிறோமோ அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். வேறு வீடுகளிலோ வெளியிலேயோ சென்று விரதம் நிறைவு செய்யக்கூடாது. இரவில் எங்காவது வெளியில் தங்கி விட்டால் விரதம் நிறைவுற்றதாக ஆகி விடும்.

விரத நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அம்மனை வணங்க வேண்டும். ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போடாத  எந்திரம் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போட்ட படம் வைத்து, எந்திரம் மற்றும் படத்திற்கு பூக்கள் அணிவித்து தீப, தூப ஆராதனைகள் செய்து வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை தினமும் உங்களால் முடிந்தவரை சொல்லி வர வேண்டும். 48 நாட்களுக்குள் லட்சம் எண்ணிக்கையை மந்திரம் தொட்டால் மிகவும் சிறப்பு.

எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி. நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம். அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். அம்மனை மனதார தியானிக்க வேண்டும்

ராஜ ராஜேஸ்வரி – மந்திரம்

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார – உகார – மகார ,
ஸ்திரி , ஸ்ரீம், ஐம்,  மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி,   ராஜ மோக வசி ,
சர்வ லோக ,    சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,
எந்தனைக் கண்டோர், உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,
மாத்தான், வஞ்சகர்  வந்து வணங்கிட ,
என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார – உகார – மகார ஆதரவான தன்மைப் போல் ,
ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,
வசிய வசிய வசி ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா.

Leave a Reply