தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை பேச்சு? ராஜஸ்தான் முதல்வர் கைது ஆவாரா?

7

தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்த ராஜஸ்தான் பெண் முதல்வர் வசுந்தரா ராஜை கைது செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இம்ரான் மசூத், நரேந்திர மோடிய துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வேன் என ஆவேசமாக பேசினார். இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் கவுரளி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் பெண் முதல்வர் வசுந்தராராஜா, “தேர்தலி முடிந்த பின்னர் யார் யாரை துண்டு துண்டாக துண்டிப்பார்கள் என்று தெரிய வரும்” என்று பேசினார்.

ஒரு மாநில முதல்வரை வன்முறையை தூண்டிவிடும் பேசும்படி பேசியதாக கண்டனம் தெரிவித்த ராஜஸ்தான் காங்கிரஸார் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு முதல்வரை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியும் முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply