ராஜஸ்தான் எம்.எல்.ஏ மகன் ஓட்டிய கார் விபத்து? 3 பேர் பலி

ராஜஸ்தான் எம்.எல்.ஏ மகன் ஓட்டிய கார் விபத்து? 3 பேர் பலி

rajastanசமீபத்தில் சென்னையில் தொழிலதிபரின் மகள் ஒருவர் போதையில் கார் ஓட்டியதால் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் ராஜஸ்தானில் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் ஒட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலதின் சுயேச்சை எம்எல்ஏ நந்த கிஷோர் மஹரியா என்பவரது மகன் சித்தார்த் மஹரியா நேற்று அதிகாலை 1.30 மணியவில் ஜெய்ப்பூரின் ஜலுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரில் அவரது உறவினர் ஜெயந்த் மற்றும் இருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சி-ஸ்கீம் என்ற இடத்தில் வேகமாக வந்த அவரது கார் எதிரே வந்த ஆட்டோ மீதும், போலீஸ் ரோந்து வாகனம் மீதும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோவில் இருந்த இருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை உதவி ஆணையர் (ஜெய்ப்பூர் தெற்கு) மனீஷ் அகர்வால் கூறும்போது, “கார் மோதியதில் ஆட்டோ 200 அடி தொலைவுக்கு வீசப்பட்டுள்ளது. காரில் இருந்த சித்தார்த், ஜெயந்த் மட்டுமே பிடிபட்டனர். இவர்களில் விபத்து ஏற்படுத்தியதாக சித்தார்த் கைது செய்யப்பட்டார்” என்று கூறினார்.

காவல்துறை கூடுதல் உதவி ஆணையர் யோகேஷ் கோயல் கூறும்போது, “விபத்தின்போது சித்தார்த் போதையில் இருந்ததற்கான முகாந்திரம் உள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்ரு கூறினார்.

இதனிடையே சித்தார்த், தான் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளார். மேலும் விபத்தின்போது மது அருந்தியிருந்ததாக கூறப்படு வதையும் அவர் மறுத்துள்ளார்.

Leave a Reply