ரூ.14 கோடி ஊழல். கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு. தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு.

Chidambaram son Nov 30_0_0_0_0ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை நடத்த கொடுக்கப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் ரூ.14 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில காவல்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில்  108 ஆம்புலன்ஸ் சேவை நடத்த வழங்கப்பட்டிருந்த டெண்டரில் அரசியல் தலையீடு உள்ளது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரை முன்னாள் அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா என்பவர் நடத்திய ‘ஜிகித்சா ஹெல்த்கேர்’ என்ற நிறுவனத்திற்கு கொடுக்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.ஏ.கான், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியி்ன் மகன் ரவிகிருஷ்ணா ஆகியோர் விதிமுறைகளை மீறி பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் அரசுக்கு ரூ.14 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து  ராஜஸ்தான் மாநில காவல்துறை இன்று ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் பெயர் இடம் பெற்றிருப்பதால் தமிழக காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது.

Leave a Reply