தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்ததால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. அந்த அணியின் ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகிய போதிலும், அதன் பின்னர் விளையாடிய ஸ்மித், ஹூடா, ஃபால்க்னர் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 163 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் முரளிவிஜய் 37 ரன்களும், பட்டேல் மற்றும் பெய்லி தலா 24 ரன்களும், மில்லர் 23 ரன்களும் எடுத்தனர். இந்த அணியின் மூன்று வீரர்கள் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3 விக்கெட்டுக்களை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபால்க்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டார்.