இன்று ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் 12 போட்டிகளில் தொடர் வெற்றி கண்டுள்ள ராஜஸ்தானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது.

உண்மையில் மும்பை இந்தியன்சுடன் சென்னை அரயிறுதியில் மோதும் என்று எதிரபார்க்கப்பட்டது. ஆனால் அன்று மும்பை அதிரடியாக அரையிறுதியில் நுழைந்ததும், டிரினிடாட் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் படு மோசமகத் தோல்வி தழுவியதும் சென்னை, ராஜஸ்தான் மோதலுக்கு வழிகோலியது.

ராயல்ஸ் அணியில் ரஹானே, வாட்சன், பிராட் ஹாட்ஜ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் திடுமென தோல்வியடைந்தது. இன்று நிச்சயம் எழுச்சியுறுமென எதிர்பார்க்கலாம்.

ஆனால் ராஜஸ்தான் தன் சொந்த மண்ணில் தோல்வியடையாமல் ஆடி வருகிறது. பொதுவாக இது போன்று கூறும்போது அந்த அணி அன்று தோற்று விடும், ஆனால் மாறாக நடந்து விட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறும்.

40 வயது பிரவீண் தாம்பேயை இன்று திராவிட் விளையாடமால் இருக்கச் செய்வது நல்லது. அவருக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான் இத்தனை போட்டிகளில் நிகழ்ந்தது. இன்று சென்னை பேட்டிங் பவருக்கு எதிராக தாம்பேயை பாம்பே வரை அடித்து நொறுக்க வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல். கிரிக்கெட்டில் இந்த இரு அணிகளும் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 8 முறை வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply