சசிகலா-ராஜாத்தி அம்மாள் சந்திப்பு. அரசியல் மாற்றம் நடக்குமா?
எதிரெதிர் துருவங்கள் என்று கருதப்பட்ட திமுக, அதிமுக இடையே பல வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா உடல்நலம் குறித்து கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் அக்க்றையுடன் விசாரிப்பது, அப்பல்லோ மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தது மேலும் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக ராஜாத்தி அம்மாள் நேற்று சென்னை அப்பல்லோ சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்துள்ளார். இருவரும் அரசியல் பேசினார்களா? என்பது குறித்த தகவல்கள் இல்லையெனினும் இந்த சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.