ரஜினி, அஜித், விஷால் ஒன்று சேரும் நாள் இதுதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பும் அதே 23ஆம் தேதிதான் சென்னையில் நடைபெறவுள்ளது.
அதேபோல் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் ரஜினி, அஜித், விஷால் ஆகிய பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதால் கோலிவுட் பரபரப்பு அடைந்துள்ளது.