திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி போட்டியா? பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு மாதங்களில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவர் மாவட்ட செயலாளர்களை சென்னையில் சந்திக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த சந்திப்பிற்கு பின் ஊடகங்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்றும் சில அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் காலியான தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொதுத்தேர்தலை சந்திக்கும் முன், இடைத் தேர்தலை சந்திக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் எனவே இந்த இரண்டு தேர்தல்களிலும் ரஜினி கட்சி போட்டியிடும் என்றும் குறிப்பாக ரஜினியே இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது முதன் முதலில் அவர் சந்தித்தது இடைத்தேர்தல் தான் என்பதும், அதே பாணியில் ரஜினியும் இடைத் தேர்தலை சந்தித்துவிட்டு அதன்பின் பொதுத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது