ஒரு மீடியாவும் இதைபற்றி விவாதம் நடத்தலையே? ரஜினி ரசிகர்கள் வேதனை

ஒரு மீடியாவும் இதைபற்றி விவாதம் நடத்தலையே? ரஜினி ரசிகர்கள் வேதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது மூன்று திட்டங்களை தெரிவித்திருந்தார். அதில் ஒன்று ஊழல் இல்லாத ஆட்சியை நாம் மாற்றத்தின் மூலம் தான் தரவேண்டும் என்பதுதான். அதில் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்றும் ஆட்சிக்கு வந்த பின்னர் கட்சியில் உள்ள முக்கிய பதவிகள் தவிர மற்ற அனைத்து பதவிகளும் பறிக்கப்படும் என்றும், கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிக்காரர்கள் வைத்திருக்கும் பதவியால் தான் ஊழல் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ரஜினியின் நேற்றைய பேட்டி குறித்து அனைத்து ஊடகங்களும் ’ரஜினி பயந்து விட்டார்’ என்றும் ’ரஜினி பின்வாங்கி விட்டார்’ என்றும் ’ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்’ என்றும்’ ரஜினி பின்னால் யார் இருக்கின்றார்கள்’ என்றும் கேள்வி எழுப்பி விஆதம் நடத்தி வந்தனர்

ஆனால் ஒரு ஊடகம் கூட ’ஊழல் லஞ்சம் பற்றி விவாதம் நடத்தவே இல்லை’ என்பதுதான் வேதனையான ஒன்றாக இருக்கிறது என்று ரஜினி அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பணத்தை சுரண்டவே அரசியலுக்கு வருகிறாய் என்றால் மற்ற கட்சிக்கு போங்கள், மக்கள் பணம் மக்களுக்கே போக வேண்டும், தமிழகம் ஔிர வேண்டும், என நினைக்கிறாய் என்றால் ஆன்மீக அரசியல் வா என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply