70% ரஜினிக்குதான்: உளவுத்துறையின் அதிரடி அறிக்கையால் பரபரப்பு
மத்திய மற்றும் மாநில உளவுத்துறை வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 70% தொகுதிகள் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்குத்தான் கிடைக்கும் என்றும் அவருடைய ஆட்சி தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சி என்றும் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த தகவல் மத்திய அரசுக்கு ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்த போதிலும் மாநில அரசு ஆடிப்போய் இருப்பதாக கூறப்படுகிறதே. மேலும் ரஜினி கட்சியில் எந்த கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்ற தகவலையும் உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மாபெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது