மலேசிய அதிபருக்காக வாய்ஸ் கொடுப்பாரா ரஜினிகாந்த்?
தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கே பிரச்சாரம் செய்ய மறுத்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலேசிய அதிபருக்காக மலேசியா சென்று பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மலேசிய பிரதமரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நஜீப் ரசாக் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்த மலேசிய அதிபர் தேர்தல் சமயத்தில் தனக்காக வாய்ஸ் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் ரஜினிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால் அவரது வாய்ஸ் தனது வெற்றிக்கு உதவும் என நஜீப் ரசாக் எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாய்ஸ் கொடுத்து வந்த ரஜினி, மலேசிய அதிபருக்காக வாய்ஸ் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்