லிங்கா விவகாரம். முதல்வரை சந்திக்க ரஜினி திட்டமா? பெரும் பரபரப்பு

rajini and jayalalithaசூப்பர் ஸ்டார் லிங்கா பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிங்கா படத்திற்காக கொடுத்த நஷ்ட ஈடு, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், திருப்பூர் சுப்பிரமணியன் ஒருதலைபட்சமாக நஷ்ட ஈடு கொடுக்கும் விஷயத்தில் நடந்து கொண்டதாகவும் கூறிய ஒருசில லிங்கா படத்தின் விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன் வரும் 13ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் லிங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்பதை விவரிக்க உள்துறை செயலாளரை சந்திக்கவும் அவர்கள் அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சக செயலாளரின் அப்பாயின்மெண்ட் தேதி கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரஜினி அப்பாயின்மெண்ட் கேட்டிருப்பதாகவும், இன்று அல்லது நாளை அவருக்கு அப்பாயின்மெண்ட் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் நேற்று கருணாநிதி பேரனின் திருமண நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டதால் ரஜினிக்கு முதல்வரிடம் இருந்து அப்பாயின்மெண்ட் கிடைக்காது என்றும் ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளதாகவும், லிங்கா விவகாரத்தில் இன்று அல்லது நாளை திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்புடன் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply