கே.எஸ்.ரவிகுமார் கொடுத்த வசனத்தை பேச மறுத்த ரஜினி. லிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு.

rajini and ravikumarகே.எஸ்.ரவிகுமார் கொடுத்த வசனங்களை ரஜினி பேசமுடியாது என கூறியதால் லிங்கா படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படக்குழுவினர்களும், தயாரிப்பாளரும் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் “லிங்கா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் சில பஞ்ச் டயலாக் வசனங்களை ரஜினியிடம் கொடுத்த கே.எஸ்.ரவிகுமார் அந்த வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று சொல்லிகொடுத்தார்.

ஆனால் ரஜினிகாந்த், இயக்குனரிடம் இந்த படத்தில் பஞ்ச் டயலாக் தேவையில்லை என்றும், அதனால் பஞ்ச் டயலாக் காட்சிகளை திரைக்கதையில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று கூறினாராம். இயக்குனரும், அவருடைய உதவியாளர்களும் பல நாட்கள் மூளையை கசக்கி எழுதிய பஞ்ச் டயலாக்குகளை ரஜினி வேண்டாம் என்று கூறியதால் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது அறிமுகமாகும் சிறு நடிகர்கள்கூட தங்கள் படத்தில் பஞ்ச் டயலாக்குகள் வைக்கின்றனர். இந்நிலையில் தானும் பஞ்ச் டயலாக்குகளை பேசுவது சரியாக இருக்காது என்பது ரஜினியின் வாதம். ஆனால் படக்குழுவினர்களோ, ‘பஞ்ச் டயலாக்குகளை ஆரம்பித்து வைத்ததே நீங்கள்தான். ரசிகர்களும் உங்கள் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை எதிர்பார்ப்பார்கள். எனவே பஞ்ச் டயலாக்குகளை நீங்கள் கண்டிப்பாக பேசவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் ரஜினிகாந்த் பிடிவாதமாக பஞ்ச் டயலாக் வசனங்களை பேச மறுத்து வருவதால் அவரை சமாதானப்படுத்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முயற்சி செய்து வருகிறார்.

Leave a Reply