ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் ரஜினி யாருக்கு ஆதரவு கொடுப்பார் என அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்பாக இருக்கும். இந்த தேர்தலிலும் அவர் யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்று ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் மு.க.அழகிரி, ரஜினியை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் நெருங்கிய நண்பரான ரஜினி, திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் மோடியின் தூதுவர் ஒருவர் ரஜினியின் வீட்டுக்கு வந்து ரகசியமாக அவரை சந்தித்து சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட ரிலீஸுக்கு தமிழக அரசால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரையில் ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸின் முக்கிய தலைவர் கே.வி.தங்கபாலு, நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர், தேசபக்தி மிக்கவர். தேர்தலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.