விஜய் படத்தில் இணைந்த ரஜினி-ஏ.ஆர்.ரஹ்மான்
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வரும் ஞாயிறு அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் விஜய் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வதால் ‘தெறிக்க’ வைக்கும் அளவுக்கு இந்த விழாவை நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.,
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘தெறி’ படத்தில் ஆறு பாடல்கள் உள்ளது. இந்த படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 20-ஆம் தேதி நடைபெறும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவின்போது ஏராளமான விஜய் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தையும் தயாரிப்பதால் இந்த விழாவுக்கு அவர் வர ஒப்புக்கொண்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.