ரஜினிகாந்த்-ஜாக்கிசான் இணணயும் பிரமாண்டமான படம்
ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் ஜாக்கிசானும், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தும் உள்ளனர். இவர்களில் ஒருவரை வைத்து படமெடுத்தாலே அந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டிவிடும். இந்நிலையில் ஒரு படத்தில் இருவரையும் இணைக்க பிரபல மலேசிய தயாரிப்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.
Mohd Rafeezi என்ற பிரபல மலேசிய தயாரிப்பாளர் “The Chini Saga’ என்ற பெயரில் ஒரு படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் இணைக்க கட்ந்த நான்கு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தார். ஆனால் இருவருடைய கால்ஷீட் மற்றும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக இந்த படம் தள்ளிப்போய்க்கொண்டே வந்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரஜினி மற்றும் ஜாக்கிசானை சந்தித்து ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் Mohd Rafeezi தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூர் அவர்களும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது
ஆங்கில மொழியில் தயாராகும் இந்த படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தியா, நார்வே, இந்தோனேஷிய, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.