வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் ரஜினி

வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாகிகளை முறைப்படி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று அகில இந்திய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்

வேலூரில் கடந்த 19ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம், வேலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியல் இதோ:

மாவட்ட செயலாளர்: சோளிங்கர் ரவி
மாவட்ட இணை செயலாளர்: ஆர்.நீதி
மாவட்ட துணை செயலாளர்கள்: வாணியம்பாடி கணபதி, ராஜன் பாபு, முகமது கலிஃபா
மகளிர் அணி செயலாளர்: சங்கீதா
இளைஞர் அணி செயலாளர்: அருண்

மேலும் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் மாவட்ட மன்ற நிர்வாகிகள், மாநகாரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு பொறுப்புகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.