சீருடை அணிந்த போலீஸார்களை தாக்குவதா? ரஜினிகாந்த் கண்டனம்

சீருடை அணிந்த போலீஸார்களை தாக்குவதா? ரஜினிகாந்த் கண்டனம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ஒருசிலர் சீருடை அணிந்த போலீசார்களை தாக்கிய வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’,

ரஜினியின் இந்த கருத்துக்கு பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலீசார்களின் அராஜகம் குறித்து வாய்திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் கண்டனம் தெரிவிப்பது ஏன்? என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply