லிங்கா போராட்டாக்காரகளுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட ரஜினி அதிரடி.

rajinikanthலிங்கா படத்தின் நஷ்ட ஈடு தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.  லிங்கா திரைப்படம் பரவலாக நல்ல வசூலை கொடுத்திருந்த போதிலும், அதனை வாங்கிய விநியோகிஸ்தர்கள் ரஜினியை மிரட்டி நஷ்ட ஈடு வாங்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ரஜினியின் இமேஜை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விநியோகிஸ்தர்களின் போராட்டத்திற்கு ரஜினியை பிடிக்காத அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே பாபா படத்தின் ரிலீஸின்போது பிரச்சனை செய்த பாமக, தற்போது பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுத்துள்ளது. சீமான், வேல்முருகன் ஆகியோர்கள் ஏற்கனவே போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை கொடுத்துவிட்டனர். இந்நிலையில் மேலும் ஒருசில கட்சிகளும் லிங்கா விவகாரத்தில் தலையிட உள்ளதாகவும், இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கட்சி சதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

லிங்கா பிரச்சனையை அமைதியோடு கவனித்து வந்த ரஜினி, தற்போது பொங்கி எழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. ,பிரதமர் வேட்பாளரே தன்னுடைய வீடு தேடி வந்து தேநீர் குடித்துவிட்டு ஆதரவு கேட்கும் நிலையில் இருக்கும் தன்னை டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிகள் விளம்பரத்திற்காக தன்னை வம்புக்கு இழுப்பதால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள ரஜினி, பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக அவரது ரசிகர்கள் லிங்கா விநியோகிஸ்தர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர் அனுமதி கொடுத்திருப்பதாகவும், விரைவில் தானே களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினியின் அதிரடி நடவடிக்கைக்கு விஜய், அஜீத், சரத்குமார் உள்பட பிரபல நடிகர்கள் அனைவரும் ஆதரவு தருவதாக கூறியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.எப்படியோ சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக்கேற்ப தானுண்டு தன் வேலையுண்டு என்ற இருந்தவரை அரசியலுக்கு இழுத்து சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டன சில அரசியல் கட்சிகள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply