நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசின் சிறப்பு விருது. அமிதாப் வழங்கி கெளரவித்தார்.

rajini awardகோவாவில் தொடங்கிய 45வது  சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசின் சிறப்பு விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வழங்கி கெளரவித்தார்.

சர்வதேச திரைப்பட விழா கோவா மாநிலத்தில் நேற்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நேற்று மாலை இந்த விழாவினை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி  வைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள்பங்கேற்றனர்.

இந்த விழாவில் சுமார் 300 படங்கள் திரையிடப்பட உள்ளன. `குற்றம் கடிதல்` என்ற ஒரே ஒரு படமும் திரையிடப்படவுள்ளது.

மேலும் இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த திரை ஆளுமைக்கான இந்திய சினிமா சிறப்பு நூற்றாண்டு விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இந்ஹ விருதினை அமிதாப் பச்சன் மற்றும் அருண் ஜெட்லி இணைந்து வழங்க ரஜினி பெற்றுக்கொண்டார்

விருதை பெற்றவுடன் இந்த விழாவில் பேசிய ரஜினி, தனக்கு கிடைத்த இந்த விருதை தனது வெற்றிக்கு காரணமான இயக்குனர்கள், கவிஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.

முன்னதாக விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா வந்த ரஜினி, ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசியல் குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

Leave a Reply